முன்னாள் காதலியின் முகத்தில் வெட்டிவிட்டு காதலன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ராஜீவ் காந்தி நகர் பகுதியச் சேர்ந்தவர் குமார். இவரோட மகள் இந்துமதியும், அதே பகுதியச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமாரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல விசயம், இந்துமதியோட குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, இந்துமதியை கடந்த 7 வருடத்திற்கு முன்பே அங்குள்ள வாணியம்பாடியச் சேர்ந்த கார்த்தி என்பவரோட திருமணம் செய்து வைத்து உள்ளனர். இதனையடுத்து, இந்துமதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்த நிலையில் தான், கணவர் கார்த்திக்கோட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாத்திற்கு முன்பு ராஜீவ்காந்தி நகரில் இருக்கும் அம்மா வீட்டுக்கு இந்துமதி வந்து உள்ளார்.
இதனையடுத்து, அஜித் குமாருக்கும் – இந்துமதிக்குமு் இடையே மீண்டும் அவர்களது பழைய காதல் மலர்ந்திருக்கிறது. இவர்கள் இருவரும் கொஞ்ச நாட்களாக நன்றாக பேசி பழகி வந்த நிலையில, திடீரென்று காதலன் அஜித்குமார்ட இந்துமதி பேச மறுத்து, அந்த பழக்கத்தை நிறுத்தி இருக்கிறார்.
இதனால், கடும் விரக்தி அடைந்த அஜித் குமார், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் எதர்ச்சையாக இந்துமதியை பார்த்திருக்கிறார். அப்போது, அவருடன் பேச முயன்ற நிலையில், இருவருக்கும் இடுயே அப்பேர்து வாக்குவாதம் ஏற்பட்டடு உள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த அஜித் குமார், தான் மறைத்து வச்சிருந்த கத்தியை எடுத்து, இந்துமதி முகத்தில் வெட்டி உள்ளார். பின்னர், அவரது உடம்பிலும் சரமாரியாக வெட்டிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்துல சரிந்த இந்துமதி அலறி அடித்து துடித்து உள்ளார். உடனடியாக, அந்த பகுதியில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்துமதிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, காதல் தோல்வியால் கடும் விரக்தி அடைந்த அஜித் குமார், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தானாக சென்று சரண் அடைந்திருக்கிறார்.
இதனிடையே, பட்ட பகலில் முன்னாள் காதலியின் முகத்தில் காதலன் கத்தியால் வெட்டிய சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.