Fri. Mar 14th, 2025

சினிமா பிரபலங்கள் யார் யார் எங்கெங்கே ஓட்டு போடப்போறாங்க தெரியுமா?

By Aruvi Apr18,2024

சென்னையில் குடியிருக்கும் பிரபல சினிமா நட்சத்திரங்கள் யார் யாருக்கு எங்கெங்கே ஓட்டு இருக்கிறது, யார் யார் எங்கெங்கே ஓட்டு போடப்போகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்..

விடிஞசா தேர்தல்! என்ன வேணாலும் நடக்கலாம். யார் வேணாலும் வரலாம். யாரும், யாருக்கும் ஓட்டு போடலாம். ஆனால், கடைசி நேரத்துல தான் சினிமா ஸ்டார்ஸ் யார் யாருக்கு எங்க ஓட்டு இருக்கு.. யார் யார் எங்க எல்லாம் போய் ஓட்டுப்போடப் போகிறார்கள் என்ற விசயம். ஆனால், நமக்கு மட்டும் சீக்ரெட்டா சில டேட்டாஸ் கிடைச்சுக்கு “சினிமா பிரபலங்கள் யார் யார் எங்கெங்கே ஓட்டு போடப்போறாங்க அப்படிங்கிற விசயம். 

சென்னையிலேயே தேர்தலில் ஓட்டுப் போட அதிக பிரபலங்கள் வரக்கூடிய ஒரே இடம் சென்னை போயஸ்கார்டன் அருகே உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி தான். ஜெயலலிதா இருக்கும் வரை, அந்த ஸ்பாட்டுதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததா இருந்தது. இப்ப உள்ள நிலைமையும் கிட்டதட்ட அப்படிதான். ஆனாலும், யார் யார் எங்கெங்கே வாக்களிக்க உள்ளார்கள் என்பதை முழு விபரத்துடன் இப்போது பார்க்கலாம்..

முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் – SIET கல்லூரி 

நடிகர் ரஜினிகாந்த்தும் – ஆழ்வார்பேட்டை 

நடிகர் கமல்ஹாசன் – திருவள்ளூர் சாலை பள்ளி

நடிகர் விஜய் – நீலாங்கரை, கபாலீஸ்வரன் நகர் பள்ளி

நடிகர் அஜித் குமார் – திருவான்மியூர் பள்ளி

நடிகர் விக்ரம் – பெசன்ட் நகர் தியோபிகல் சொசைட்டி பள்ளி

நடிகர் சூர்யா – தி.நகர் இந்தி பிரசார சபா பள்ளி யில் சூர்யா, 

கார்த்தி, சிவகுமார் குடும்பம் – தி.நகர் இந்தி பிரசார சபா பள்ளி 

நடிகர் டி.ராஜேந்தர், சிம்பு –  தி.நகர் இந்தி பிரசார சபா பள்ளி

நடிகர் விஜய் சேதுபதி – கீழ்பாக்கம் பள்ளி 

நடிகர் சிவகார்த்திகேயன் – நுங்கம்பாக்கம் இந்துசமய ஆணையர் அலுவலகம்

இயக்குனர் பாக்யராஜ், சாந்தனு, பூர்ணிமா – நுங்கம்பாக்கம் பிஎஸ்எஸ்பி பள்ளி

இயக்குனர் மணிரத்னம், சுகாசினி – ஆழ்வார்பேட்டை காந்தி நிலையம்

நடிகர் சத்யராஜ்  – நுங்கம்பாக்கம் இந்துசமய ஆணையர் அலுவலகம்

கவிப்பேரரசு வைரமுத்து – சூளைமேடு ஜெயகோபால்கரோடி பள்ளி

இயக்குனர் சமுத்திரக்கனி –  சாலிகிராமம் காவேரி பள்ளி

நடிகர் செந்தில் – சாலிகிராமம் காவேரி பள்ளி

நடிகர் வடிவேலு – சாலிகிராமம் காவேரி பள்ளி

நடிகர் யோகிபாபு – வளசரவாக்கம் பள்ளி

விஷால், ஆர்யா – அண்ணாநகர் பள்ளி

நடிகை திரிஷா – டிடிகே ரோடு சேவியர் பள்ளி

நடிகை குஷ்பு – சாந்தோம் மந்தைவெளி பா்க்கம் பள்ளி

ஜி.வி.பிரகாஷ் – தி.நகர் பள்ளி

நடிகை பிரியா பாவனி சங்கர் – மாம்பாக்கம் பள்ளி

காமெடி நடிகர் கருணாகரன் – திருவான்மூியூர் பள்ளி

பிரேமலதா, விஜயபிரபாகரன்,  சண்முகபாண்டியன் – சாலிகிராமம் காவேரி பள்ளி

ஏ.ஆர்.ரஹ்மான் – கோடம்பாக்கம்

கனிமொழி  – செயிண்டபாஸ் பள்ளி, ராதாகிருஷ்ணன் சாலை

தமிழிசை – காவேரி பள்ளி சாலிகிராமம்

எல்.முருகன் –  கோயம்பேடு

சசிகலா – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி

ஜி.கே.வாசன் – ஆழ்வார்பேட்டை

செல்வபெருந்தகை – கீழ்பாக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு வெயில், மழை என்று எதுவும் பார்க்காமல் தமிழ்நாட்டின் அடையாளங்களாக வலம் வரும் முக்கிய சினிமா நட்சத்திரங்களே வாக்களிக்க வருகை தரும் போது, பொது மக்களாகிய நாமும் வெயில் மற்றும் அலைச்சலை பார்க்காமல் மறக்காமல் ஓட்டு போட்டு நாமும் நமது ஜனநாயக கடமையை ஆற்றுவோம். பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நெஞ்சம் நிமிர்வோம்.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *