Fri. Mar 14th, 2025

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் பிரபுதேவா!

By Aruvi May20,2024

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ”கண்ணப்பா” படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேன்ஸ் திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், இந்திய திரையுலகின் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு விழாவை அலங்கரித்தனர்.

அதன்படி, டாக்டர் எம்.மோகன் பாபு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியத் திரைப்படமாக உருவாகும் ”கண்ணப்பா” வின் நாயகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது மனைவி விரானிகா மற்றும் ”கண்ணப்பா” படத்தின் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோரின் வருகை, பிரமாண்ட நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

அத்துடன், அட்லியர் விரானிகா வடிவமைத்த தனிச் சிறப்பம்சம் கொண்ட கருப்பு நிற டக்‌ஷிடோ உடையணிந்து கண்கவர் தோற்றத்தில் தோன்றிய நடிகர் விஷ்ணு மஞ்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், அவருக்கான அதி நவீன தோற்றத்தை பாலிவுட் ஒப்பனையாளர் அனிஷா ஜெயின் சிறப்பாக வடிவமைது இருந்தார்.

குறிப்பாக, நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது “கண்ணப்பா” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுக்காக தற்போது கேன்ஸில் முகாமிட்டு உள்ளார். “கண்ணப்பா” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை ஒலிம்பியா தியேட்டரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கூடவே, கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடிகர் பிரபுதேவா ஜொலித்தார். இது, இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *