பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது செய்து செய்யப்பட்டு உள்ளார்.
சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தென் சென்னை உள்ள ஒரு வீட்டில் பள்ளி மாணவிகளை கும்பல் ஒன்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக சென்னை மத்திய குற்றப் பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ரகசிய தகவலின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் சிறுமியுடன் இருந்தது தெரிய வந்தது. அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, அந்த முதியவர் தனக்கு சென்னை தி.நகரைச் சேர்ந்த பெண் புரோக்கர் தான் பள்ளி மாணவியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அவருடன் சந்தோஷமாக இருந்ததாகவும் அதற்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், குறிப்பிட்ட அந்த பெண்ணிடம் விசாரித்து உள்ளனர்.
இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் கைதாகி உள்ள பெண் பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்டு வந்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இவரின் மகள், பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அதனால், அவர் தன்னுடைய மகள் மூலம் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து இருந்ததும் விசாரணையில் தெரிய வந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்காக, தன்னுடைய மகளை அவளுக்குத் தெரிந்தவர்கள், அவளுடன் படிப்பவர்கள் என அனைவருடனும் சகஜமாக பழக வைத்து உள்ளார். பிறகு, தனது மகள் மூலம் அவர்களின் குடும்ப சூழல்களைத் தெரிந்து கொண்டு ஏழ்மையானவர்களை டார்க்கெட் செய்து வந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அவர்களுக்கு பணத்தாசை காண்பித்து, இந்த பாலியலில் தொழிலில் அந்த மாணவிகளை ஈடுபட்ட வைத்திருந்ததும் விசாரணையில் தற்போது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து, பெண் புரோக்கரின் சகோதரி, ஆண் நண்பர் ராம், நேபாளத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கோவையைச் சேர்ந்த அசோக்குமார், அடிக்கடி பள்ளி மாணவிகளுடன் சந்தோஷமாக இருந்த சென்னையைச் சேர்ந்த 70 வயது முதியவர் ரமணிதரன் ஆகியோரை தற்போது போலீசார் கைது செய்து உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்த 18 வயதில் ஒரு பெண்ணும், 17 வயதில் சிறுமி ஒருவரும் உள்ளனர். இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.