சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட வட மாநில கட்டுமான தொழிலாளி சச்சின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கூடவே, வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதால் இன்றைய தினம் மஞ்சள் நிற எச்சரிக்கையும் காலை முதல் விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தில் முன்னிட்டு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலானது சதமதித்து உள்ளது. குறிப்பாக ஈரோடு, கரூர் பரமத்தி போன்ற இடங்களில் தொடர்ந்து வெயிலானது 109°F மேல் வெப்பமானது பதிவாகி, மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது.
தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மக்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படுவதால், மக்கள் இந்த வெயில் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெயிலை பொறுத்துக் கொள்ள முடியாமல் மக்கள் வெப்ப தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் காஞ்சிபுரத்தில் வேலை செய்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி 25 வயதான சச்சின், கடந்த 2 நாட்களுக்கு முன் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
அதே போல், சென்னையில் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிட தொழிலாளி 35 வயதான வேலு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 35 வயது உடைய வேலு என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே ஒன்றாம் தேதியன்று மீஞ்சூர் நெடுஞ்சாலை பகுதியில் கட்டுமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியம் 1:30 மணி அளவில் வெப்பதாக்கம் காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர் அங்கிருந்து பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கே அதிக பணம் கேட்டதால் அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்து உள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.