சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பித்து ஓடிய மர்ம நபர்களை போலீசார் குஜராத்தில் வைத்து மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரேன்ஜில் வலம் வருபர் தான் நடிகர் சல்மான். மும்பை பாந்த்ரா பகுதியில் “கேலக்சி” என்ற அடுக்குமாடி கட்டடத்தில் நடிகர் சல்மான் கான் வசித்து வருகிறார்.
அங்கு அதிகாலை 5 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சல்மான்கான் வீட்டை நோக்கி 4 முறை துப்பிக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பத்தில், சல்மான்கானின் வீடு மட்டுமின்றி அவர் வீடு இருந்த குறிப்பிட்ட அந்த தெருவில் இருந்த மொத்த குடியிருப்பு வாசிகளும் கடும் பீதியடைந்தனர்.
குறிப்பாக, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, அந்த அதிகாலை வேளையில் நடிகர் சல்மான்கானும், தன்னுடைய வீட்டிற்குள் இருந்திருக்கிறார்.
எனினும் உடடினாயக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
சல்மான்கான் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் போலீசார் அதிக அளவில் அதிரடியாக குவிக்கப்பட்டனர். உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தான், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய தாதா லாரன்ஸ் பிஸ்னாயின் சகோதரர் பொறுப்பேற்றதாக செய்திகள் வெளியானது.
பல மாதங்களாக நிழலுலக தாதா லாரன்ஸ் பிஸ்னாய், சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்றும் இன்னொரு பக்கத்தில் கூறப்பட்டது. பல வழக்குகளில் தொடர்புடைய அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில், குற்றவாளிகளை மும்பை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளும் அடுத்த சில மணி நேரத்தில் குஜராத்தின் புஜ் நகரில் பதுங்கியதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு விரைந்து சென்று போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ச்சியாக, குற்றவாளிகளை மும்பைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்த நிலையில், “நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஸ்னாயின் சகோதரரின் உத்தரவில் இதை செய்ததாக ஒப்புக்கொண்டனர்” என்றும் கூறப்படுகிறது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இருவரும் பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்டனர் என்றும், சல்மான்கான் வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குஜராத்துக்கு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், இது தொடர்பான விசாரணை மேலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சல்மான்கான் வீட்டு வாசலில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம், சல்மான்கானை மிரட்டவா? அல்லது சல்மான்கானை டார்கெட் பண்ணியே இது நடைபெற்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.