“நான் எல்லோருக்கும் மேலானவன் தான்” என்று, பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.
இசைஞானி இளையராஜா, உண்மையிலேயே இசையில் ஒரு பெரும் ஞானி என்பதில் யாருக்கும் எள் அளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவர் ஒரு மாமேதை!
அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் காய்ந்து கிடந்த இவை வெளியில் மிகச் சரியாக, கடந்த 1970, 1980, 1990 -களில் இளையராஜா இசை உலகில் கொடிக்கட்டிப் பறந்தார். அந்த சமயங்களில் இளையராஜாவுக்கு இணை தமிழ் சினிமாவில் யாருமே இல்லை என்பது தான் எதார்த்த உண்மை. ஆனால், அதே நேரத்தில் இன்றளவும் அதே நிலை நீடிக்கிறதா? என்று கேட்டால், அது அவரவர் இசை சார்ந்த ரசினையை பொருத்தது என்பது தான் பதில்.
“இசைஞானி இளையராஜா அப்போது இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போது இல்லை” என்ற விமர்சனங்களையும் இப்போது பொது வெளியில் காண முடிகிறது. ஆனால், இது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒரு விசயம். ஆனால், இன்று பிரச்சனை இது இல்லை.
இளையராஜா இசை அமைத்த அவரது பாடல்கள் காப்புரிமையே தற்போது பூதாகாரமாக வெடித்துக் கிளம்பி இருக்கிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
அதாவது, இந்த வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை இசையமைத்த சுமார் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி ஆகிய இரு இசை நிறுவனங்களம் உரிமை கோருகிறன்றன. ஆனால், இந்த இரு நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இப்படி, விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்த நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குதான் வாதங்கள் தான் தற்போது சூட்டை கிளப்பி இருக்கிறது.
இந்தத வழக்கில் இரு தரப்பிலும் பேசப்பட்ட வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி, “இளையராஜா இசை அமைத்த அனைத்து படத்தின் காப்புரிமைகளும் அந்தந்த படத்தின் தயாரிப்பாளரிடம் உள்ளது. இசையமைப்பாளர் குறிப்பிட்ட படத்திற்கு ஊதியம் பெற்ற உடன் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா?” என்றும், அந்த இசை நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
மிக முக்கியமாக, “இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடந்த 1970, 1980, 1990 -களில் இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போது இல்லை. இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறாரா?” என்றும், அந்த நிறுவனம் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்திருக்கிறது.
இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ஒரே அடியாக “ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என கடுமையாக தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்திகிறார்கள்.
இந்த சூழலில் இந்த வழக்கின் விசாரணை நாளை 16 ஆம் தேதிக்கு ஒத்திக்கப்பட்டு இருக்கிறது.தற்போது, இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் தான்” என்ற வாதம், தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.