சென்னையில் வழக்கத்தை விட அனல் காற்று வீசும் என்றும், தமிழ்நாட்டை வெப்ப அலை தாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது. பகல் வேளைகளில் பொது மக்கள் வெளியே நடமாட முடியாத சூழலே தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. மழைக்காலம், பனிக்காலம் முடிந்து பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்துது வருகிறது. சென்னையை பொறுத்த வரையில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிக அளவிலான வெப்பம் பதிவாகி வருவதால், கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசத் தொடங்கி உள்ளது. இதனால், சென்னை வானில் ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது.
சென்னையை பொருத்த வரையில் பகல் நேரங்களில் கானல் நீர் தெரியும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரத்தில, இரவு நேரங்களில் அதிகமான புழுக்கம் காணப்படுகிறது.
முக்கியமாக, அக்னி நட்சத்திர காலத்திற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு முன்னதாகவே வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் தான், “தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளதாக” தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய பிரதீப்ஜான், ‘தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்றும், இன்னும் சில தினங்களில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும்” என்றும், பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
அத்துடன், “சென்னையில் மட்டும் சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்றும், சென்னையில் ஏற்பட்ட கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கப் போவதாகவும்” அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால், சென்னை வாசிகள் ஒரு வித பயத்திலும் மிரட்சியிலும் உரைந்து போய் உள்ளனர்.