ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை அளித்தப் பிறகு, அவர்கள் என்ன செய்தார்கள்? எந்த மாதிரியான ரியாக்சன் அளித்தார்கள் என்பதை பார்க்கலாம்..
18 வது நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தற்போது கலைக்கட்டி உள்ளது. பிரபலங்கள் முதல் ஒவ்வொரு சாமானியன் வரை தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
ரஜினி
நடிகர் ரஜினிகாந்தைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்களித்துவிட்டு, போலிங் பூத்திலிருந்தே தான் வாக்கினை செலுத்தியதன் அடையாளமாக தனது விரலில் வைக்கப்பட்ட மையை காட்டிச் செல்லும் வழக்கம் உண்டு. ஆனால், இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் தனது கையை காட்டிக்கொண்டே நடந்து சென்றார். மாறாக, போலிங் பூத்திலிருந்தே தான் வாக்கினை செலுத்தியதன் அடையாளமாக தனது விரலில் வைக்கப்பட்ட மையை காட்ட மறுத்துவிட்டார்.
அதாவது, சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாக்கை செலுத்தினார். எப்போது வாக்களித்தாலும், போலிங் பூத்திலிருந்தே மை வைத்த விரலை காட்டிச் செல்லும் ரஜினி, செய்தியாளர்கள் பல முறை கேட்டும் அவற்றை துளியும் காதில் வாங்காதவாறு, ரஜினி தனது கையை மறைத்த படி அப்படி கடந்துச் சென்றார். இதனையடுத்து, “ரஜினி ஏன் இப்படி செய்தார்?” என்று, பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன் வாக்களித்த பின் இயந்திரத்தில் சத்தம் கேட்காததால் சலசலப்பு
விஜய்
நடிகர் விஜய், வாக்களிக்க வீட்டில் இருந்து புறப்படும்போது, ஏராளமான ரசிகர்கள் அவரின் காரை சூழ்ந்துகொண்டு, வாக்குச்சாவடி வரை வந்தனர். இதனால், வாக்குசாவடி மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய், தனது வாக்கினை செலுத்தியதும், போலிங் பூத்திலிருந்தே மை வைத்த விரலை காட்டினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டார். ஆனால், விஜயின் கையில் காயம் இருக்கிறது. அந்த காயத்தின் மேல் விஜய் பிளாஸ்திரி ஒட்டி வந்திருந்தார். விஜய் கையில் உள்ள காயம், தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது.
ஆனால், சற்று முன்னதாக, “இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வாக்குகள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது” என்று, சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார்
திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்தினார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு அஜித்குமார் வந்ததால் ரசிகர்களை அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அதிகாரிகள் அவரை வாக்குச்சாடியினுள் அமர வைத்து காலை 7 மணிக்கு முதல் ஆளாக வாக்களிக்க அனுமதித்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கீழ்பாக்கத்துல் உள்ள வாக்குச்சாவடியில ஓட்டு போட்டுட்டு வெளிய வந்தார். அப்போது, வீல் சேரில் அமரிந்திருந்த மூதாட்டி ஆசையுடன் கேட்டுக்கொண்டதற்கு இனங்க, அந்த மூதாட்டியடன் நடிகர் விஜய் சேதுபதி செல்ஃபி எடுத்துக்கொண்ட, அவரது விருப்பத்தை நிறைவேற்றினார். ஓட்டு போட வந்த இடத்திலும் தனது ரசிகர்களின் ஆசையை விட்டுக்கொடுக்காமல் நடிகர் விஜய் சேதுபதி நடந்துக்கொண்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆபிரகாம் லிங்கன் கூறியது போல் புல்லட்டை விட வலிமையானது வாக்கு என்றும், அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்” என்றும், வலியுறுத்தினார். மேலும், “வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாய்வு செய்யாமல் தங்களுக்கு யாரை பிடித்து இருக்கிறதோ அவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்” என்றும், அவர் கூறினார்.
நடிகர் டி. ராஜேந்தர்
நடிகர் டி. ராஜேந்தர், திநகரில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெயில்னா அடிக்கதான் செய்யும்; அதையும் மீறி வாக்களிக்க வரணும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.நடிகர் பிரபு
நடிகர் பிரபு
நடிகர் பிரபு, தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, “ஓட்டு போடுவது ஜனநாயக கடமை. தயவு செஞ்சு எல்லாரும் வந்து ஓட்டுப்போடுங்க” என்று, வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
கவிஞர் வைரமுத்து
சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கவிஞர் வைரமுத்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, “அடித்தட்டு மக்கள் காட்டு ஆர்வத்தை போலவே, படித்தவர்களும் தீவிரமாக ஆர்வம் காட்டி வாக்களிக்க வேண்டும் என்றும், அப்போது தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இந்த கருப்பு மை என்பது வேறொன்றும் அல்ல, நீங்கள் பெறுகின்ற அதிகாரத்தின் அச்சாரம்” என்றும் தெளிவுப்பட பேசினார்.